குவியும் குப்பைக்கு தீர்வு வருமா?

Update: 2025-08-03 11:33 GMT

திருப்பூர் கே.செட்டிப்பாளையத்தில் உள்ள அம்மன் கோவில் அருகே சாலையோரங்களில் குப்பைகள் மலைபோல் குவிந்து காணப்படுகிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு சுற்றுச்சூழல் மாசு அடைகிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகம் சுழிக்கின்றனர். சாலையோரத்தில் குப்பைகள் கிடப்பதால் காற்றில் பறக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை காணப்படுகிறது. எனவே சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

தேவி,கே.செட்டிப்பாளையம்.

மேலும் செய்திகள்