சுகாதார சீர்கேடு
திருப்பூர் கே.செட்டிப்பாளையம் மெடிக்கல் பஸ் நிறுத்தம் அருகே குப்பைகள் மலைபோல் குவிந்து காணப்படுகிறது. இந்த குப்பை குவியலால் சுற்றுச்சூழல் மாசு அடைவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. மேலும் அந்த குப்பையில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்களால்அந்தப்பகுதியில் உள்ள அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகவும் அச்சப்படும் நிலை உள்ளது. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
செல்வம், திருப்பூர்.