பெரம்பலூர் வட்டம் செங்குனம் அண்ணா நகரில் இருந்து அருமடல் செல்லும் சாலையோரம் குப்பைத்தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குப்பைத்தொட்டி சாய்ந்து கிடப்பதால் இப்பகுதி மக்கள் அருகே குப்பைகளை கொட்டி விட்டு செல்வதால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்றி, சாய்ந்து கிடந்த குப்பை தொட்டியை சரி செய்து வைத்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.