கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் ,புகழூர் நகராட்சி பாலத்துறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கறிக்கடைகள், மளிகை கடைகள், பேக்கரிகள் என ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகளும் உள்ளன. இப்பகுதியில் சேகரமாகும் பிளாஸ்டிக் கழிவுகள், இறைச்சி கழிவுகளை சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சாலையின் ஓரத்தில் கொட்டி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.