மத்தூரில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள ராச வீதி பகுதியில் பல வாரங்களாக குப்பைகள் வாருவதில்லை. இதனால் அந்த பகுதியில் குப்பைகள் குவிந்து வருவதால் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும் குப்பை தொட்டியும் பராமரிக்கப்படாமல் உள்ளது. எனவே உடனடியாக இப்பகுதியில் உள்ள குப்பைகளை வாரி தூய்மைப்படுத்தி குப்பை தொட்டியும் புதிதாக வைக்க வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
-சலீம், மத்தூர்.