தாரமங்கலம் ஒன்றியம் குருக்குப்பட்டி கிராமத்தில் உள்ளது பவளத்தானூர் ஏரி. இந்த ஏரியையொட்டி உள்ள பிரதான சாலையில் மருத்துவ மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. தெருநாய்கள் உணவை தேடி குப்பைகளை கிளறுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அங்கு சுகாதார கேடு ஏற்படுகிறது. இந்த ஏரியையொட்டி கொட்டப்படும் குப்பைகளை அகற்ற அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
-அரசன், தாரமங்கலம்.