சுகாதார சீர்கேடு

Update: 2025-07-13 17:40 GMT

கிருஷ்ணகிரி நகரில் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள சர்வீஸ் ரோடு பகுதிகளில் ஏராளமான குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளன. குப்பைகளை அகற்றாததால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மாவட்ட தலைநகராக உள்ள கிருஷ்ணகிரியில் துப்புரவு பணி சீராக செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால் சுகாதார சீர்கேட்டால் அந்த பகுதியில் நோய் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே தமிழக அரசும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நாதன், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்