சேலம் கோரிமேட்டில் இருந்து குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா செல்லும் வழியில் சாலையோரம் அதிகளவில் பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. மேலும் அந்த பகுதியில் மாநகராட்சி சார்பில் இரண்டு குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. தற்போது அந்த குப்பைத்தொட்டிகள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. எனவே புதிதாக இரண்டு குப்பைத்தொட்டிகள் அமைத்து, சாலையோரம் குப்பைகள் கொட்டுவதை தடுக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-இளவரசன், சேலம்.