செங்கல்பட்டு மாவட்டம், நெய்குப்பி பஞ்சாயத்திற்குட்பட்ட நரசங்குப்பம் பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நெய்குப்பி பகுதியில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் நரசங்குப்பம் ஏரி அருகில் கொட்டப்பட்டு தீ வைக்கப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள குழந்தைகள் மற்றும் வயதானோர் மூச்சுதிணறல் பாதிப்புகளுக்கு உள்ளாகி, அவ்வபோது ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சென்று வருகின்றனர். தொடர்ந்து அரங்கேறிவரும் இந்த அவல நிலையால் பல உயிர்சோதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து புகார் அளித்தும் எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பதில்லை என குற்றச்சாட்டு எழுகிறது. இதற்கு என்னதான் முடிவு கிடைக்கும்.