கோவையை அடுத்த கொண்டையம்பாளையம், வரதயங்கார்பாளையம் ஆகிய கிராமங்களில் எங்கும் குப்பை தொட்டிகள் இல்லை. கழிவுநீர் வடிகால் வசதியும் கிடையாது. இதன் காரணமாக ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. கழிவுநீரும் திறந்தவெளியில் வழிந்தோடுகிறது. இதனால் மேற்கண்ட கிராமங்களில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே அங்கு குப்பை தொட்டிகள் வைத்து, சேகரமாகும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றுவதோடு கழிவுநீர் வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும்.