ிருப்பூர் மண்ணரை பாரப்பாளையம் சாலையின் ஓரத்தில் உள்ள கழிவுநீர் கால்வாயில் குளிர்பான பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கவர்கள் போன்றவை நிறைந்துள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேற வழியில்லாமல் அங்கேயே தேங்கியுள்ளது. அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீர் கால்வாய் கட்டப்படாமல் உள்ளதால் செடி- கொடிகள் முளைத்து புதர் போன்று வளர்ந்துள்ளது. இதனால் அப்பகுதியில் மக்களுக்கு தீ்ங்கு விளைவிக்கக்கூடிய பாம்பு, பூரான், தேள் போன்ற விஷ ஜந்துக்கள் இருப்பதால் எப்போதும் பயத்துடனேயே கடக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.