விருதுநகர் அல்லம்பட்டி அருகே உள்ள அனுமன் நகர் பிள்ளையார் கோவில் தெருவில் சாலையில் குப்பைகள் அதிக அளவில் குவிந்து கிடக்கின்றன. இதனால் அப்பகுதியில் அதிக துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் இந்த குப்பைகளில் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாவதால் பொதுமக்களுக்கு டெங்க,மலேரியா போன்ற நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் குவிந்து கிடக்கும் குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
