திருவள்ளூர் மாவட்டம், எண்ணூர், பாரதியார் நகரில் 100-க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள 1-வது தெருவில் சாலை ஓரங்களில் குப்பைகள்குவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பயங்கர துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சிதறி கிடக்கும் குப்பைகளை அகற்றி, முறையான குப்பை தொட்டிகளை அந்த பகுதியில் அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக சரிசெய்ய வேண்டும்.