சுகாதார சீர்கேடு

Update: 2025-05-18 10:23 GMT

குழித்துறை பழைய பாலத்தில் இறைச்சி, ஓட்டல் மற்றும் வீட்டுக் கழிவுகளை சிலர் கொட்டி விட்டு செல்கின்றனர். இந்த கழிவுகளால் அந்த பகுதியில் முழுவதும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன்கருதி பாலத்தின் ஓரத்தில் கொட்டப்பட்டுள்ள கழிவுகள், குப்பைகளை அகற்றுவதுடன் அங்கு எச்சரிக்கை பதாகையை வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்