திருச்சி மாவட்டம் ஶ்ரீரங்கம் ராஜகோபுரத்திலிருந்து கிழமேலாக செல்லும் திருமதிலுக்கு அருகிலும், காந்திரோட்டிற்கு வடபுறமும் பகுதியில் சாலையோரம் ஏராளமான குப்பைகள் கொட்டப்பட்டு குவிந்து வருகிறது. இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.