சுகாதார சீர்கேடு

Update: 2025-05-11 11:10 GMT

கோவையை அடுத்த காருண்யா நகர் சிறுவாணி சாலையோரத்தில் குப்பைகளை கொட்டக்கூடாது என்று அதிகாரிகள் அறிவிப்பு பலகை வைத்து உள்ளனர். ஆனால் அதை மீறி அங்கு குப்ைபகள் கொட்டப்பட்டு வருகிறது. மேலும் குப்பை தொட்டிகளும் உள்ளது. அதில் கொட்டப்படும் குப்ைபகளையும் உடனுக்குடன் அகற்றாததால், மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும். மீண்டும் குப்பைகளை கொட்டுவதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்