ஊட்டியில் வனத்துறை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் குப்பை தொட்டிகள் எதுவும் இல்லை. இதனால் சாலையோரத்தில் குப்பைகளை கொட்டி குவித்து வைத்து உள்ளனர். அந்த குப்ைபகள் காற்றில் பறந்து சாலையில் விழுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகிறார்கள். மேலும் அந்த பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. எனவே அந்த குப்பைகளை உடனடியாக அகற்றுவதுடன், மீண்டும் குப்பை கொட்டாமல் தடுக்க தேவையான நடவடிக்கையை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எடுக்க வேண்டும்.