பொதுமக்கள் கோரிக்கை

Update: 2025-04-27 14:44 GMT

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வெளியாம்பாக்கம் கிராமத்தில் சிலர் சாலை ஓரத்தில் குப்பைகள் கொட்டுகின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. குழந்தைகள் மற்றும் வயதானோர் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலை ஓரத்தில் கொட்டும் குப்பைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்