கோவை அருகே காளப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாலையோரங்களில் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. அதில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகம் உள்ளன. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே சாலையோரங்களில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.