ஊட்டியில் கோடை சீசன் தொடங்கி உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். ஆனால் ஊட்டி கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள நடைபாதையை ஒட்டி சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. அதில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் முகம் சுழிக்கும் நிலை உள்ளது. அத்துடன் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. எனவே அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும்.