தாராபுரம்-கரூர் சாலையில் கொளத்துப்பாளையம் அருகில் ராமப்பட்டிணம் பகுதியில் சாலையோரம் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சாலையில் குப்பை கொட்டுபவர்கள மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.