திங்கள்சந்தை பஸ்நிலையம் எதிரே சாலையோரம் கழிவுநீர் ஓடை அமைக்கப்பட்டுள்ளது. ஓடையின் மீது மூடப்பட்டுள்ள சிமெண்டு சிலாப்பு திறந்து கிடக்கிறது. இந்த ஓடையில் கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி கழிவுநீர் ஓடையை தூர்வாரி சிலாப்பை மூடிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவராம், பரம்பை.