குவியும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2025-04-20 09:59 GMT

திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு பல்வேறு பகுதியில் இருந்து பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள் வாங்க வருகின்றனர். மார்க்கெட்டில் இருந்து சூரியன் நகர் செல்லும் சாலையில் உள்ள ஓடையின் ஓரமாக குப்பைகள் மற்றும் காய்கறி கழிவுகள் கொட்டுவதால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் மார்க்கெட்டிற்கு வரும் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே சாலையோரம் குப்பைகள் கொட்டுவதை தடுத்து, அதனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராகவன், திருப்பூர்.

மேலும் செய்திகள்