பெரம்பலூர் மாவட்டம் காரை கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமான குப்பைகளை போட்டு வருகின்றனர். இதனால் ஏரியில் உள்ள தண்ணீர் மாசு அடைந்து துர்நாற்றம் வீசுகிறது. மேலும் குப்பைகள் ஆங்காங்கே ஏரியில் தேங்கியும் நிற்கிறது. இதனால் ஏரியில் குளிப்பவர்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அப்புறப்படுத்தவும்,குப்பைகளை கொட்டுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.