குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2025-04-13 14:15 GMT

சென்னை அடையாறு, கஸ்தூரிபாய் நகர் 5-வது மெயின் ரோடு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியின் தெரு முனையில் குப்பைகள் அதிகமாக கொட்டப்படுள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும், குப்பைகளால் அந்த பகுதி முழுவதும் பயங்கர துர்நாற்றம் வீசுவதுடன், தொற்று நோயும் பரவக்கூடிய அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்