குப்பைகள் அகற்றப்பட்டது

Update: 2025-04-13 07:18 GMT
குப்பைகள் அகற்றப்பட்டது
  • whatsapp icon

கொட்டாரம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆறுமுகபுரம் அருகில் டாக்கர் குளம் உள்ளது. இந்த குளத்தின் வடக்கு கரையோரத்தில் சிலர் குப்பைகளை கொட்டி வந்தனர். குப்பை அகற்றப்படாததால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், குப்பைகள் காற்றில் பறந்து குளத்திற்குள் விழுவதால் தண்ணீரும் மாசடையும் நிலை ஏற்பட்டது. இதுபற்றி ‘தினத்தந்தி’ புகார்பெட்டியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்றி தூய்மை படுத்தினர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும் அப்பகுதி மக்கள் நன்றியை தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்