திருவள்ளூர் மாவட்டம் பெரிய கோலடி சாலை மற்றும் அம்பத்துார்-ஆவடி-திருவேற்காடு செல்லும் சந்திப்பு சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றது. சாலையின் இருபுறமும் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு மற்றும் நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும். சாலையில் செல்லும் போது குப்பைகளால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் குப்பையை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.