சுகாதார சீர்கேடு

Update: 2025-03-16 17:14 GMT

ஆத்தூரில் இருந்து பைத்தூர் கிராமத்திற்கு செல்லும் வழியில் சாலை ஓரங்களில் குப்பைகள், கோழி கழிவுகள் மூட்டை, மூட்டைகளாக கொட்டப்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகளும், மாணவ-மாணவிகளும் மிகவும் சிரமம் அடைகின்றனர். சாலையோரம் கொட்டப்படும் கோழி கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கோழி கழிவுகளை கொட்டும் இறைச்சி கடைக்காரர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

-கணேசன், ஆத்தூர்.

மேலும் செய்திகள்