செங்கல்பட்டு மாவட்டம், கொத்திமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட ஏரிக்கரை பகுதியில் உள்ள பிரதான சாலை அருகில் கோழி கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் அதிக அளவு துர்நாற்றம் வீசுகிறது. சாலை வழியாக வாகனங்கள் செல்ல முடியவில்லை. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றவும், இறச்சி கழிவுகள் கொட்டுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.