திருவள்ளூர் மாவட்டம் சோழவரம், அருமந்தை ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் மதுரா மேட்டுப்பாளையம் ஆகும். இப்பகுதியில் ஏரி ஒன்று இருக்கிறது. ஏரியில் மர்ம நபர்கள் பொதுமக்கள் யாரும் இல்லாத சமயத்தில் அதிகளவில் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் ஏரியின் சுகாதாரம் கேள்விக்குரியாகி உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அப்புறப்படுத்தி ஏரியின் சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.