விருதுநகர் மாவட்டம் சூலக்கரை, தாதம்பட்டி சாலையில் குப்பைகள் அதிகளவில் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுவதால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு மேற்கண்ட பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.