
வீரவநல்லூர் பேரூராட்சி குப்பைகளை மோர்மடத்தில் இருந்து வெள்ளாங்குழி செல்லும் சாலையோரம் கொட்டுகின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. அங்குள்ள வீடுகளில் மக்கள் வசிக்க முடியாதவாறு துர்நாற்றம் வீசுகிறது. எனவே குப்பைகளை ஊருக்கு ஒதுக்குப்புறமாக கொட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.