ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் வண்ணாங்குண்டு கிராமத்தில் தெருக்களில் குப்பைகள் அதிகளவில் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடுடன் காணப்படுகிறது. மேலும் தேங்கி கிடக்கும் குப்பைளால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே தேங்கிய குப்பைகளை அகற்றவும், குப்பை தொட்டி அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.