அரியலூர் மாவட்டம் கவரப்பாளையம் ஊராட்சி பகுதியில் கவரப்பாளையம்- ஸ்ரீமுஷ்ணம் சாலையில் அந்த அந்த ஊர் பொதுமக்களுக்காக சுடுகாடு ஒன்று உள்ளது. அந்த சுடுகாட்டின் அருகே ஏராளமான குப்பைகளை மலைப்போல் குவிந்து கிடக்கிறது. மேலும் குப்பைகளில் இருந்து கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அந்த வழியாக நடைப்பயிற்சி செல்பவர்கள் மூக்கை பிடித்து சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகள் அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.