ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களிலும் குப்பைகள் முறையாக அகற்றப்படுவது இல்லை. இதன் காரணமாக ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடக்கிறது. குறிப்பாக சாலையோரங்களில் குவிந்து கிடக்கும் குப்ைபகளை அந்த வழியாக உலா வரும் கால்நடைகள் தின்று வருகின்றன. அதில் பிளாஸ்டிக் குப்ைபகளும் அடங்கும். இதனால் அந்த கால்நடைகளுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் குப்ைபகளால் நகரில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே குப்பைகளை முறையாக அகற்ற நகராட்சி அதிகாரிகள் முன்வர வேண்டும்.