சூளகிரியில் கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் சாலை உள்ளது. இந்த பகுதியில் சாலையோரத்தில் குப்பைகள் மூட்டை, மூட்டைகளாக கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் போது துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் குப்பைகள் மூட்டை, மூட்டைகளாக கட்டி கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரவீன், சூளகிரி.