கோத்தகிரி அருகே கக்குச்சி கிராமத்தில் குப்பைகள் குவிந்து கிடப்பதாக புகார்கள் எழுந்தது. ஆனால் குப்பைகளை முறையாக அகற்றாமல் தீ வைத்து எரித்து வருகின்றனர். இதனால் அங்கு கடும் புகைமூட்டம் ஏற்படுகிறது. மேலும் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் உள்பட உடல் நலக்கோளாறு ஏற்படுகிறது. எனவே குப்பைகளை தீ வைத்து எரிக்காமல் முறையாக அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் முன்வர வேண்டும்.