சுகாதார சீர்கேடு

Update: 2025-02-02 18:01 GMT
  • whatsapp icon

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு 31-வது வார்டு எஸ்.என்.வி.எஸ். 3-வது வீதியில் தனியாரின் கட்டடிட கழிவுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாகியும் அவை அகற்றப்படாததால் அருகில் உள்ள கால்வாயில் விழுந்து அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேற வழியின்றி துர்நாற்றம் வீசுவதுடன் கொசுத்தொல்லையும் ஏற்படுகிறது. அப்பகுதியை கடக்கும் மக்கள் முகம்சுழித்தவாறே செல்கின்றனர். தேங்கும் கழிவு நீரில் உற்பத்தியாகும் கொசுக்களால் மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு தீர்வு காண்பார்களா....


மேலும் செய்திகள்