விருதுநகர் மாவட்டம் ரோசல்பட்டி மயானத்தில் குப்பைகள் அதிகளவில் கொட்டப்படுவதால் யாரும் உள்ளே செல்ல சிரமப்படும் நிலை உள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அப்பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கவும் தேங்கும் குப்பைகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.