தீ வைத்து எரிக்கப்படும் குப்பைகள்

Update: 2025-02-02 16:36 GMT

வடமதுரை முத்துநகர் பகுதியில் சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுவதுடன் தீ வைத்தும் எரிக்கப்படுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளிக்கிறது. அப்போது அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே சாலையோரத்தில் குப்பைகள் கொட்டுவதை தடுப்பதுடன், அவற்றை தீ வைத்து எரிப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்