சின்னசேலம் அடுத்த அம்மையகரம் கிராமத்தில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் அங்கு சாலையோரமாக கொட்டி தீவைத்து எரிக்கப்படுகிறது. அதில் இருந்து அதிக அளவில் புகை வெளியே வருவதால் அப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. மேலும் வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல், மூச்சுதிணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.