குப்பை தொட்டி அமைக்க வேண்டும்

Update: 2025-01-26 11:41 GMT

கோத்தகிரி அருகே கக்குச்சி கிராம பகுதியில் குடியிருப்புகளில் சேகரமாகும் குப்பைகளை கொட்டுவதற்கு எங்கும் குப்பை தொட்டிகள் வைக்கப்படவில்லை. இதன் காரணமாக சாலையோரங்களில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே அங்கு குப்பை தொட்டிகள் அமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்