சுகாதார சீர்கேடு

Update: 2025-01-26 08:58 GMT

வில்லுக்குறி பேரூராட்சிக்கு உட்பட்ட அந்திசந்தை பகுதி உள்ளது. இந்த பகுதியில் சாலையோரத்தில் சிலர் குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகளை கொட்டுகின்றனர். இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும், கழிவுகளை நாய்கள் கடித்து இழுத்து சாலையில் போடுவதால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பாதசாரிகள் நலன்கருதி அங்கு கொட்டப்பட்ட குப்பைகளை அகற்றுவதுடன், குப்பைகளை கொட்டுபவர்கள் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜாண் பீட்டர், அந்திசந்தை.

மேலும் செய்திகள்