வேடசந்தூர் அருகே வே.புதுக்கோட்டை ஊராட்சி ஆதிதிராவிடர் காலனி பகுதியில் சாலையோரத்தில் சிலர் குப்பைகளை கொட்டிச்செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அகற்றுவதுடன், அவற்றை கொட்டுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.