சுகாதார சீர்கேடு

Update: 2025-01-19 16:15 GMT

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள தென்கரை ஊராட்சியில் வைகை ஆற்றின் இணைப்பு பகுதியான நிலையூர் கால்வாய் பாலத்தின் அருகில் சிலர் குப்பைகளை கொட்டி தீயிட்டு எரிக்கின்றனர். இதனால் ஏற்படும் புகை மண்டலம் அப்பகுதி முழுவதும் பரவி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. குப்பைகளை கொட்டுபவர்கள் மற்றும் அதனை எரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? 

மேலும் செய்திகள்