குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2025-01-12 09:13 GMT

செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி திருவள்ளுவர் தெருவில் தினமும் ஏராளமான மக்கள் இருசக்கர வாகனத்திலும், நடந்தும் சென்று வருகின்றனர். அந்த பகுதி மக்கள் இந்த சாலை ஓரத்தில் அதிக அளவு குப்பை கொட்டிவிட்டு செல்கின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும், சாலையை கடந்து செல்லும்போது அதிக அளவு துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மூக்கை மூடி கொண்டு செல்கின்றனர். எனவே, நகராட்சி நிர்வாக துறை அதிகாரிகள் குப்பைகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்