கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் கிருஷ்ணகிரி செல்லும் சர்வீஸ் சாலையிலும், பஸ் நிலையம் அருகிலும் குப்பைகள் நீண்ட காலமாக தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. குறிப்பாக நீண்ட நாட்களாக அந்த பகுதியில் குப்பைகள் கிடப்பதால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே சர்வீஸ் சாலை ஓரத்தில் குப்பைகள் கொட்டாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சீனிவாசன், சூளகிரி.