அகற்றப்படாத குப்பைகள்

Update: 2025-01-05 09:42 GMT

செங்கல்பட்டு மாவட்டம், பொழிச்சலூர் ஊராட்சி 8-வது மற்றும் 10-வது வார்டில் மாநகராட்சி சார்பில் குப்பை சேகரிக்க தினமும் பணியாளர்கள் வருவதில்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள காலி மனையில் அனைவரும் குப்பையை கொட்டி செல்கின்றனர். இந்த குப்பை கொட்டப்பட்ட இடத்தில் பன்றிகள் அதிக அளவு சுற்றிதிரிகிறது. மேலும், அதிக அளவு துர்நாற்றமும் வீசுகிறது. அந்த பகுதி வழியாக செல்பவர்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் தினமும் குப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்