சென்னை கொடுங்கையூர், சீதாராம் நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள குப்பை தொட்டிகளில் குப்பைகளை அகற்ற மாநகராட்சி வண்டிகள் சில நாட்களாக வரவில்லை. இதனால் குப்பைகள் நிரம்பி வழிகிறது. பயங்கர துர்நாற்றம் வீசுவதால் சாலையில் செல்லும் பொதுமக்கள் மூக்கை மூடிகொண்டு செல்லும் நிலை உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் குப்பைகளை உடனே அகற்றி, அந்த பகுதியை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.