சுகாதார சீர்கேடு

Update: 2025-01-05 07:25 GMT

அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி பூஜைபுரைவிளை உள்ளது. இந்த பகுதியில் சிலர் பொது இடத்தில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அங்கு எச்சரிக்கை பலகை வைக்கப்பட்ட பிறகும் சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றுவதுடன், அங்கு குப்பைகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செல்வகுமார், தென்தாமரைக்குளம்.

மேலும் செய்திகள்